எனக்கு அப்படி தோன்றினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்... அனிருத் அதிரடி பேட்டி
அனிருத்
தமிழ் சினிமாவில் தெறிக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்களால் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் தான் இசையமைப்பாளர் அனிருத்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் அனிருத்தும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது அனிருத், பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் கிங், நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2, தர்மன், அல்லு அர்ஜன்-லோகேஷ் கனகராஜ் படம், நானியின் பாரடைஸ், Ak 64 என 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றி வருகிறார்.

பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் அனிருத்திடம், நீங்கள் எப்போதாவது பட வேலைகளில் அழுத்தம் உணர்ந்தீர்களா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், இசையமைப்பதற்காக எனக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்று உணர்ந்தால் நான் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன் அங்க இருந்து வெளியேறிவிடுவேன்.

10 பேர் ஒரு படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்தார் என்னுடைய பாடல்கள், இசையின் மூலம் அந்த எண்ணிக்கையை 13, 14 ஆக் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என கூறியுள்ளார்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan