அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்.. எத்தனை கோடி தெரியுமா?
அனிருத்
அனிருத், தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவை தாண்டி கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார். அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியான விரைவிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.
தமிழில் கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 படங்களும் தெலுங்கில் கிங்டம், மாஜிக், த பாரடைஸ், ஹிந்தியில் கிங் போன்ற படங்கள் இவரது இசையமைப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது.
சம்பளம்
10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஒரு படத்திற்கு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கிவரும் நிலையில் மேலும் சில கோடிகளை அவர் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.