இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் இதோ
அனிருத்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் வந்த இளம் இசையமைப்பாளர் தான் அனிருத்.
2011ம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர் முதல் பாடலிலேயே உலகளவில் பேமஸ் ஆனார்.
முதல் படத்திலேயே பெரிய அளவில் வளர்ந்த இவர் அடுத்த படத்திலேயே விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்காக அவர் இசையமைத்த தீம் மியூசிக் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக உள்ளது.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்து சாதனை செய்து வருகிறார். விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 171, கமலின் இந்தியன் 2 என அடுத்தடுத்து அனிருத் இசையமைப்பில் படங்கள் வர இருக்கிறது.
சொத்து மதிப்பு
இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.
ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அனிருத் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.