இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்திய சினிமாவில் பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம். இவரின் புகழ் எங்கேயோ போய்விட்டது, ஆனால் அவர் எப்போதுமே தன்னை சாதாரணமாக மனிதராகவே காட்டிக் கொள்வார்.
அந்த அமைதி தான் மக்களுக்கு அவரை மிகவும் பிடிக்க காரணமாக உள்ளது.
அண்மையில் ரகுமானின் மகள் கடிஜாவிற்கு திருமணம் நடந்தது, இந்த திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு எந்த பிரபலமும் கலந்துகொள்ளவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சியில் கூட பிரபலங்கள் இல்லை.

ஏ.ஆர். ரகுமானின் சொத்து மதிப்பு
ரகுமான் அவர்கள் ரோஜா படம் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கி இப்போது வரை ஓடிக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக அவரது இசையமைப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் இசை அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இப்படி அயராது உழைத்துக் கொண்டே இருக்கும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 595 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதுவும் இந்த கணிப்பு 2022ம் ஆண்டின் படி கூறப்பட்டுள்ளதாம்.
காவ்யாவிற்கு பதில் முல்லை வேடத்தில் இனி இவர்தான் நடிக்க போகிறாரா?- ஷாக்கில் ரசிகர்கள்