இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்
ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் வளர்ச்சி ஹாலிவுட் வரை வளர்ந்து இருக்கிறது.
ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறார்.
அடுத்தடுத்த தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, ஜீனி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படம் என இசையமைக்க உள்ளார்.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது, அதேபோல் ஒரு பாடல் பாட ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.600 முதல் 650 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
