சிவகார்த்திகேயன்-வெங்கட் பிரபு படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. முதன்முறையாக அமையும் கூட்டணி
சிவகார்த்திகேயன்
கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமாக அமைய படம் விமர்சனத்தை தாண்டி வசூல் ரீதியாக பெரிய லாபத்தை ஈட்டியது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி படத்தில் நடித்து வருகிறார், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சுகன்யாவின் முகத்திரையை கிழித்த ராஜி, மீனா, ஷாக்கான குடும்பத்தினர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட்
பராசக்தி திரைப்படம் 80களில் நடக்கும் கதை போன்று உருவாகி வருகிறது. மதராஸி திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது, வட இந்தியர்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது போன்று கதை இருக்குமாம்.
அடுத்த படம்
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பேசும்போது, சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படம், படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என கூறியுள்ளார். தற்போது என்ன தகவல் என்றால் இவர்களின் படத்திற்கு அனிருத் தான் இசை என கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு திரைப்பயணத்தில் அனிருத்துடன் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
