தளபதி விஜய்யின் படத்தில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெறும் இசையமைப்பாளர், செம குஷியில் ரசிகர்கள்..
தளபதி விஜய் அடுத்த நடிக்கவுள்ள தளபதி 65 படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இதற்கு முன் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருந்ததாக அவரே கூறியிருந்தார்.
ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு, தற்போது வேறு ஒரு இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருடன் தளபதி 65 திரைப்படம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த தமனிடம், ரசிகர் ஒருவர் தளபதி விஜய் படத்தில் நீங்கள் விரைவில் பணிபுரிவீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக “விஜய் படத்தில் விரைவில் பணிபுரிவேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் சூர்யா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், அவர் மனிதநேயம் மிகுந்த நடிகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தல அஜித்தின் படத்தில் பணிபுரிய மிகவும் ஆவலுடன் காத்து இருப்பதாகவும், அதே போல் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க தனக்கு ஆசை என்றும் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா? News Lankasri
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu