இசையமைப்பாளர் எஸ்.தமனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா
எஸ்.தமன்
ஆந்திராவில் பிறந்த இசையமைப்பாளரும், நடிகருமான தமன், பழம்பெறும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கண்டசாலா பாலராமய்யாவின் பேரன்.
இவருடைய தந்தை கண்டசாலா சிவகுமார் டிரம்ஸ் இசை கலைஞர், பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.
2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்தார், அதைத்தொடர்ந்து சிந்தனை செய், அய்யனார், மிஸ்டர் மஜ்னு, சூரியவன்ஷி போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
பின் தெலுங்கில் 2009ம் ஆண்டு மல்லி மல்லி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கினார். தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்த தமன், விஜய்யின் வாரிசு படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
சொத்து மதிப்பு
சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஒரு படத்திற்கு இசையமைக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறும் தமன் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மாதா மாதம் ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.
பிரம்மாண்ட வீடு, சொகுசு கார்கள் என தமனின் சொத்து மதிப்பு ரூ. 50 முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.