இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
தமிழ் சினிமாவிற்கு ரோஜா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, 2008ல் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் ஆஸ்கர் வென்றவர் ஏ.ஆர். ரஹ்மான்.
இவர் இசையில் தற்போது தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது.
இப்படம் மட்டுமின்றி கோப்ரா, இரவின் நிழல், பத்து தல, வெந்து தணிந்தது காடு, மாமன்னன் ஆகிய தமிழ் திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இது தவிர்த்து பாலிவுட், ஹாலிவுட் என பல திரையுலகில் உருவாகி வரும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ரஹ்மான்.
முழு சொத்து மதிப்பு
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 600 கோடி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.
