முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் முக்கிய நடிகர்! யார் தெரியுமா?
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகவிருந்த திரைப்படம் 800.
இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்படம் தொடங்கும் முன்னே பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிழம்பியதால் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகி கொண்டார்.
பின்னர் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை முன்னகர்த்த விருப்பமில்லை என படம் கைவிடப்படுவதாக முரளிதரன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரிட்டனைச் சேர்ந்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர் உள்ளிட்ட மிகவும் பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.