புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம்
முத்தழகு
ஆஷிஷ் சக்ரவர்த்தி, ஷோபனா, லட்சுமி வாசுதேவன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் முத்தழகு.
4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் நவம்பர் மாதம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் தான் நடிகை ஷோபனா.
இவர் தற்போது விஜய்யில் புதியதாக ஒளிபரப்பாக போகும் மீனாட்சி சுந்தரம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
புதிய தொடர்
தமிழ் சீரியல்களில் 2வது லீட் ரோல்களில் நடித்துவந்த நடிகர்கள் இப்போது தெலுங்கில் முக்கிய ரோலில் அதாவது நாயகர்களாள கலக்கி வருகிறார்கள்.
விஷ்ணு, சங்கரேஷ் ஆகியோரை தொடர்ந்து தற்போது முத்தழகு, பாவம் கணேசன் சீரியல் புகழ் தயான் ஹீரோவாக தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளாராம்.