முத்தழகு சீரியல் நடிகையின் காரை நிறுத்தி கிராமத்து மக்கள் செய்த காரியம்- நடிகையே வெளியிட்ட வீடியோ
முத்தழகு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக உள்ளது முத்தழகு.
மாலை 3.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி, வைஷாலி தனிகா, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சில சூழ்நிலைகளால் அஞ்சலி மற்றும் முத்தழகு இருவரும் பூமிநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்கள்.
இப்போது அஞ்சலி திருமணம் பொய் என பூமிநாதன் நிரூபித்தும் அவர் சில சூழ்சியால் இன்னும் அவரை விட்டு விலகாமல் உள்ளார். முத்தழகு கர்ப்பமாக இருக்க அஞ்சலி பொய் நாடகம் செய்து வருகிறார்.
இன்றைய எபிசோடில் இருவருக்கும் சீமந்தம் நடக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
ஷோபனா வீடியோ
இதனிடையே சென்னை திருவேற்காடு பகுதியில், காரில் சென்றுகொண்டிருந்த நடிகை ஷோபனாவை கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் பலரும், ஷோபனாவை வழி மறித்து பேசியுள்ளனர்.
அவர்களை பார்த்த ஷோபனாவும் தனது காரை நிறுத்தி அவர்களிடம் ஆனந்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த வீடியோவையும் ஷோபனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.