சிறகடிக்க ஆசை: அருண் ஒரு அரை மெண்டல்.. ஈகோ புடிச்சவன்.. வாய்விட்டு மாட்டிக்கொண்ட முத்து
தமிழக மக்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை.
சண்டை போட்ட சீதா
பூக்கடை திரும்ப வந்ததற்கு அருண்தான் காரணம் என சீதா நினைத்திருந்தார். ஆனால், அதற்கு முத்துதான் காரணம் என உண்மை தெரியவந்தவுடன், அருணிடம் சண்டை போட்டுவிட்டு, தனது அம்மாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். இதை கேள்விப்பட்ட முத்து தனது மனைவி மீனாவுடன் சீதாவை பார்க்க வந்து, அங்கு சீதாவிற்கு உபதேசம் செய்கிறார்.
அருண் ஒரு அரை மெண்டல்
இதில், அருணை பற்றி "அவன் ஏதாவது சொன்னால் நீயும் கோபப்படாத. அவருக்கு போலீஸ் திமிருடன் இணைந்து ஈகோவும் இருக்கு. அடிக்கடி அரை மெண்டல் மாதிரி நடந்துக்குவான்" என முத்து சொல்லி முடிப்பதற்குள், வீட்டிற்குள் இருந்து அருண் வருகிறார்.
அருண் இங்குதான் இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டாமா சீதா என முத்துவின் மைண்ட் வாய்ஸ் கேட்க, இப்படி வாய்விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு என ரசிகர்கள் கூறுகிறார்கள். சரி, இனி சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.