கண்ணீரில் மீனா.. முத்து எடுத்த முடிவு! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரொமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா மற்றும் அருண் திருமணத்துக்கு முத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனால் முத்துவுக்கு தெரியாமல் மீனா அவர்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துவைத்துவிட்டார்.
அதன்பின் முத்து திடீரென மனம்மாறி திருமணத்திற்கு ஓகே சொல்ல அருண் - சீதா திருமண ஏற்பாடு நடக்கிறது.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் நடக்கும் கடைசி நேரத்தில் முத்துவின் காதுகளுக்கு ஒரு விஷயம் வருகிறது. அருணுக்கு இது இரண்டாம் திருமணம் என்பது தான் அது.
அதன்பிறகு முத்து நேராக அருண் சட்டையை பிடித்து கேட்க, 'ஆமாம் இது எனக்கு இரண்டாம் திருமணம் தான். முதல் திருமணமும் சீதா உடன் தான் நடந்தது.'
'மீனா தான் சாட்சி கையெழுத்து போட்டு திருமணம் நடத்தி வைத்தார்' எனவும் அருண் கூற, முத்து கோபத்தில் கொந்தளிக்கிறார்.
மீனா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் முத்து என்ன முடிவு எடுப்பார்? ப்ரோமோவை பாருங்க.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    