ஸ்ருதி அப்பாவை கன்னத்தில் அடித்த முத்து.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடக்கப்போகும் அதிர்ச்சி
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரோகினி இருவருக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நடைபெற்று வருகிறது. இதில் முத்துவை எப்படியாது கோபப்படுத்தி பிரச்சனை செய்ய வைக்க வேண்டும் என ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் சதி செய்து வருகிறார்.
பல முயற்சிகள் செய்தும் முத்து கோபப்படவில்லை. விசேஷமும் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், மீனா மீது நகை திருட்டு பழியை போடுகிறார்கள் ஸ்ருதியின் அம்மா, அப்பா.
ஸ்ருதி அப்பாவை அடித்த முத்து
நான் நகையை திருடவில்லை, ஸ்ருதி அணிந்து இருந்த மாலையில், அவருடைய நகை மாட்டிக்கொண்டு இருந்தது அதை தான் நான் எடுத்தேன் என கூறியும், நீ ஒரு திருடி என மீனாவை ஸ்ருதியின் தந்தை தொடர்ந்து கூறி கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், அமைதியாக இருந்த முத்து கோபத்தின் உச்சத்தில் ஸ்ருதியின் தந்தையை கன்னத்தில் அடித்து விடுகிறார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது என அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.