அருணை அடித்த முத்து.. காரணம் என்ன? சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. மனோஜ் - ரோகிணி விவாகரத்து விஷயம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ரோகிணி ஒரு கட்டத்தில் மனோஜுக்கு விவாகரத்து தந்துவிடலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால், திடீரென அவர் மயங்கி விழ, ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என தெரியவந்தது. இதனால், விவாகரத்து தரமாட்டேன் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். ரோகிணி விவாகரத்து தந்துவிடுவார் என நம்பி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ். ஆனால், விவாகரத்து கிடைக்கவில்லை; இதனால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என மாட்டிக்கொண்டுள்ளார்.
சீதாவை அடித்து துன்புறுத்தும் அருண்
முத்துவின் மீதுள்ள கோபத்தால், தனது மனைவி சீதாவை அடித்து துன்புறுத்தி வருகிறார் அருண். நாளுக்கு நாள் இப்படியே செல்ல, தற்போது இந்த விஷயம் முத்துவிற்கு தெரியவருகிறது. இதனால், அருண் வீட்டிலுள்ள சீதாவை, மீனா வீட்டிற்கு அழைத்து செல்கிறார் முத்து.

பின், அருண் வீட்டிற்கு வரும் முத்து, 'இனி சீதா இங்கு வரமாட்டாள்' என கூற, 'என்ன நியாயம் கேட்க வந்திருக்கியா. அவ என் பொண்டாட்டி, நான் அடிப்பேன், என்ன வேணுமானாலும் செய்வேன், அதை கேட்க நீ யாருடா?' என கூற, அருணை அடிக்கிறார் முத்து. இதன்பின், சிறகடிக்க ஆசை சீரியலில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பார்ப்போம்.
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri