ரவியை போலீஸ் ஸ்டேஷன் வர வைத்த மீனா.. நடுரோட்டில் விட்டு சென்ற முத்து
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் தற்போது முத்து மற்றும் மீனா இருவரும் பிரிந்துவிட்டனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முத்துவின் தம்பி ரவி செய்த ரகசிய காதல் திருமணத்தை மீனா தான் நடத்தி வைத்தார் என சொல்லி முத்து மீனா மீது கோபத்தில் இருக்கிறார்.
ரவி மற்றும் ஸ்ருதி போலீஸ் ஸ்டேஷன் வந்தால் தான் பிரச்சனை தீரும் என மீனா போன் செய்து வர வைக்கிறார். அவர்களும் மீனாவுக்காக வருகிறார்கள்.
முத்து - மீனா பிரிவு
ஸ்ருதி தான் மேஜர் என்பதால் தனது திருமணத்தில் யாரும் தலையிட முடியாது என கூற, போலீஸ் அதை கேட்டு முத்துவின் அப்பாவை வெளியில் விடுகின்றனர்.
அதன் பின் எல்லோரும் கிளம்பும்போது மீனாவும் அவர்களுடன் காரில் ஏற செல்கிறார். ஆனால் முத்து அவரை தடுத்து 'மரியாதையா இப்படியே கிளம்பி போய்டு' என சொல்லி நடுரோட்டில் விட்டு செல்கிறார்.
இன்னும் சில காலத்திற்கு அவர்களது பிரிவு ட்ராக் தான் சிறகடிக்க ஆசை தொடரில் வர போகிறது. அதனால் "முத்து மீனா சேரும் வரைக்கும் சீரியலை பார்க்க மாட்டோம்" என கமெண்டில் கூறி வருகின்றனர்.