சீதாவின் திருமணத்தால் பிரிந்த முத்து - மீனா!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போதைய கதைகளம்படி, சீதா - அருண் திருமணத்திற்கு ஓகே சொல்லாமல் இருந்து வந்த முத்து, இறுதியாக சம்மதம் தெரிவித்துவிட்டார்.
திருமணமும் கோலாகலமாக நடக்கவிருந்த நேரத்தில், அருணுக்கும் சீதாவிற்கு ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துவிட்டது என்பது முத்துவிற்கு தெரியவருகிறது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை முத்துவிற்கு கொடுத்த நிலையில், மீனாதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்பது தெரிந்தவுடன் உடைந்துபோய் விட்டார் முத்து.
சீதா - அருண் திருமணத்தால் தற்போது முத்து - மீனாவிற்கு இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறகடிக்க ஆசையில் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பது குறித்து Promo வீடியோ வெளியாகியுள்ளது.
பிரிந்த முத்து - மீனா
இதில், இனி நான் உன்னுடைய குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டேன், உன் குடும்பத்தை பார்க்க இனி நான் வரவே மாட்டேன் என முத்து கூறிவிடுகிறார். அதே போல் நீயும் இனி என் வீடு பக்கம் வந்துவிட்டதே என முத்து கூறியது, மீனாவிற்கு தனது தலையில் இடி இறங்கியது போல் ஆகிவிட்டது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த Promo வீடியோ..