ரஜினியின் முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
ரஜினியின் முத்து
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு ரஜினி, மீனா நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் முத்து.
ரூ. 40 கோடி வரை வசூலித்திருந்த இப்படம் அண்மையில் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது,
TRPயும் அமோகமாக வந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.

நடிகையின் லேட்டஸ்ட்
இப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சுபஸ்ரீ. 90களில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ள இவர் இங்கு ஜென்டில்மேன் மற்றும் முத்து படம் மூலம் கொண்டாடப்பட்டார்.
1993ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் 4 வருடங்கள் மட்டுமே நடித்து வந்துள்ளார்.
தற்போது சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட முத்து பட நடிகை இவரா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
