சிறகடிக்க ஆசை: சிந்தாமணி முகத்தில் கரியை பூசிய முத்து.. ரூ. 38 லட்சத்தை கட்டி வீட்டை மீட்டுவிட்டார்..
விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து தனது வீட்டை முத்து மீட்டு எடுத்தாரா, இல்லையா? பார்க்கலாம் வாங்க.
ஏலத்தில் வீடு
மோனஜ் - விஜயாவால் அண்ணாமலையின் வீடு கையைவிட்டு போனது. ரூ. 48 லட்சம் கடனை அடைத்தால் மட்டுமே இந்த வீட்டை திரும்ப தருவேன் என பைனாஷியர் கூறிவிட்டார். இதில் ரூ. 10 லட்சத்தை ஏற்பாடு செய்து முத்துவும் மீனாவும் கொடுத்துவிட்டனர். மீதமுள்ள ரூ. 38 லட்சம் கடனை அடைப்பதற்குள், சிந்தாமணி சூழ்ச்சி செய்து வீட்டை ஜப்தி செய்துவிட்டார்.

இதன்பின், அண்ணாமலையின் வீடு ஏலத்திற்கு வந்தது. ஏலத்தில் அந்த வீடு வேறு யாருடைய கைக்கும் போய்விடக்கூடாது என்பதற்காக, முத்து பல கஷ்டங்களை மேற்கொண்டார். அவருக்கு துணையாக மீனா இருந்தார். இறுதியாக தனக்கு தெரிந்த பைனாஷியர் மூலம் ரூ. 38 லட்சத்தை ஏற்பாடு செய்துவிட்டார் முத்து. ஆனால், அந்த பணத்தை கொண்டு வந்து கொடுப்பதற்குள் ஏலம் தொடங்கிவிட்டது.
வீட்டை மீட்டெடுத்த முத்து - மீனா
நடந்த ஏலத்தில் அண்ணாமலையின் வீட்டை சிந்தாமணி ரூ. 52 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். இறுதியாக ரூ. 52 லட்சம் ஏலம் விடப்போகும் நேரத்தில், சரியாக ரூ. 38 லட்சம் பணத்துடன் அங்கு என்ட்ரி கொடுத்தார் முத்து. மொத்த பணத்தையும் கட்டி தங்களது வீட்டை மீட்டு எடுத்துவிட்டார்.

அப்போது கூட, "ஏலத்தில் நான் ரூ. 52 லட்சத்திற்கு இந்த வீட்டை கேட்டிருக்கிறேன், ஆகையால் இந்த வீடு எனக்குத்தான்" என அரசு அதிகாரிகளிடம் சிந்தாமணி கேட்க, "கடனை அடைக்க இன்று வரை அவர்களுக்கு நேரம் உள்ளது, அதற்கு அவர்கள் கடனை முழுமையாக அடைத்துவிட்டார்கள். அதனால் வீடு அண்ணாமலைக்குத்தான்" என அரசு அதிகாரி முடிவு எடுத்துவிட்டார்.

சரியான நேரத்தில் வந்த பணத்தை கட்டி வீட்டை மீட்டெடுத்த மட்டுமல்லாமல், பல சூழ்ச்சிகளை செய்து வீட்டை கைப்பற்ற நினைத்த சிந்தாமணி முகத்தில் கரியை பூசி தக்க பதிலடி கொடுத்துவிட்டார்கள் முத்துவும் மீனாவும்.
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan