மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை
முத்துக்காளை
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன் முத்துக்காளை இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில், பிரபல நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
வேண்டுகோள்
மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு வருகிறாராம்.

இதனால் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவுமாறு முதலமைச்சருக்கு முத்துக்காளை வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து நடிகர் முத்துக்காளை வெளியிட்டுள்ள வீடியோ இதோ:
தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 16, 2026
சென்னை, கீழ்ப்பாக்கம் புது பில்டிங் KMC ICU 301வது வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர்
முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (வயது 47) pic.twitter.com/09MVVqPOkw
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri