இறந்தவர் திரும்பி வந்ததால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எதிர்பார்க்காத திருப்பம்
விஜய் டிவியின் சீரியல்கள் சமீப காலமாக அதிகம் சறுக்கலை சந்தித்து வருகின்றன. டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி தொடர்கள் இடம்பெறுவது சமீபத்திய வாரங்களில் அரிதாகிவிட்டது. அதனால் தற்போது விஜய் டிவி சீரியல்களில் சற்று பரபரப்பை கூட்டி இருக்கின்றனர்.
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் மாயன் vs மாறன் என பிரச்சனை தான் நடந்து வருகிறது. தங்கை ஐஸ்வர்யாவின் கணவர் (வில்லன்) முத்துராசு இறந்துவிட்டதால் அவருக்கு மாயன் திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
அதை தடுக்க முத்துராசின் அம்மா மற்றும் மாமா மாசாணி முயன்று வருகின்றனர். இந்த பிரச்சனை எல்லாம் தாண்டி ஐஸ்வர்யா - கார்த்திக் திருமணம் நடந்து முடிந்துவிட்டது போன்று ஒரு போட்டோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.
திரும்பி வந்த முத்துராசு
ஐஸ்வர்யா கழுத்தில் கார்த்திக் தாலி கட்ட போகும் நேரத்தில் மாறன் வந்து அதை தடுத்து நிறுத்துகிறார். மேலும் அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் முத்துராசு வந்து நிற்கிறார். அவர் சரியாக நடக்க முடியாமல் ஊன்றுகோல் உடனே நடந்து வந்து வில்லத்தனமாக பார்க்கிறார்.
இறந்தவன் எப்படி திரும்பி வந்தான் என அனைவரும் குழப்பி நிற்கின்றனர். அதே குழப்பம் தான் இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு.