புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துவேலுக்கு ஆபரேஷன் முடிந்தது.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
முத்துவேலுக்கு ஆபரேஷன்
ராஜியின் தந்தை முத்துவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் கதிருக்கு தெரிந்த பின், தனது மாமாவிற்கு உதவி செய்து வருகிறார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வது, அவருக்கு தேவையான மருந்துகளை வாங்கி தருவது போன்ற விஷயங்களை செய்து வந்தார்.

அதே சமயம், கதிர் மற்றும் முத்துவேல் இருவரும் ஒன்றாக காரில் வந்து இறங்குவது, கதிர் வங்கி கணக்கில் முத்துவேல் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்தது போன்ற விஷயங்கள் சக்திவேலுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது அண்ணன் மீது கோபத்தில் இருந்தார்.
இப்போது எப்படி இருக்கிறார்
இந்த நேரத்தில், சென்னையில் முத்துவேலுக்கு ஆபரேஷன் என்பதால் அவரை அழைத்து கொண்டு கதிர் சென்னை வந்தார். முத்துவேலை கவனித்து கொள்ளும் வேலையில் ராஜியிடம் கதிர் சரியாக பேசுவது இல்லை. இது ராஜிக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி கதிரை சென்னையில் ராஜி பார்த்துவிட்டார். ஆனால், "அது நான் இல்லை, நான் குன்னக்குடியில்தான் இருக்கிறேன்" என ஏதேதோ பொய் சொல்லி தப்பிவிட்டார் கதிர்.

இந்த நிலையில், முத்துவேலுக்கு புற்றுநோய்க்கான ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. முத்துவேல் நலமாக இருக்கிறார் என்றும், இனி அடுத்தடுத்து சில சிகிச்சைகள் உள்ளது அதையும் நல்லபடியாக செய்து முடித்துவிடலாம், அவர் குணமாகிவிடுவார் என்றும் மருத்துவர் கூறினார். இதை கேட்டு கதிர் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதன்பின், இருவரும் மனம்விட்டு பேசுகின்றனர். மேலும், ஆபரேஷனுக்கு பின் சற்று வலியால் கஷ்டப்படும் முத்துவேலுவை நன்றாக கதிர் கவனித்து கொள்கிறார்.