பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: முத்துவேல் சொன்ன உண்மை.. சிறையில் இருந்து வெளியே வந்தாரா கதிர்?
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது, சிறையில் இருந்து கதிர் வெளியே வந்தாரா என்பதை பற்றி பார்ப்போம்.
முத்துவேல் வாக்குமூலம்
மருத்துவமனையில் உள்ள முத்துவேல் உண்மையை கூறிவிட்டாள் தான் சிறைக்கு சென்றுவிடுவேன் என பயந்து, தனது பெரியப்பாவை கொலை செய்ய குமார் முயன்றார். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சக்திவேல் வர, 'என்னடா பண்ற?' என கேட்டார். உடனடியாக அங்கிருந்து குமார் சென்றுவிட்டார்.

இதன்பின், கண்விழித்த முத்துவேலிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக போலீஸ் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்போது, தன்னை கதிர் தள்ளிவிடவில்லை என்றும், குமார் தான் தள்ளிவிட்டான் என்றும் உண்மையை கூறுகிறார் முத்துவேல். இதை கேட்டு சக்திவேல் பழனி மற்றும் போலீஸ் என அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

விடுவிக்கப்பட்ட கதிர்
இதனால், குமார் மீது புகார் அளிக்கும்படி போலீஸ் கேட்கின்றனர். ஆனால், "குமார் இதை தெரியாமல் செய்துவிட்டான், அவன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை, நான் புகார் அளிக்கவில்லை" என முத்துவேல் கூறுகிறார். உண்மை வெளிவந்த நிலையில், சிறையில் உள்ள கதிர் விடுவிக்கப்படுகிறார். மேலும் முத்துவேலை தள்ளிவிட்டது குமார் என தெரிந்து மொத்த குடும்பமும் குமார் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

குமார் எங்கு சென்றுவிட்டான் என தெரியாமல் அனைவரும் இருக்க, சக்திவேல் குமாரை தேடி கண்டுபிடித்து "எங்க அண்ணனையா கொலை செய்ய பார்த்த" என கூறி பளார் பளார் என அடிக்கிறார். இத்தோடு எபிசோட் முடிவுக்கு வந்தது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan