சீரியலில் நடிக்கும் 90ஸ் பேவரெட் My Dear Bootham தொடர் பிரபலம்... யார் தெரியுமா?
My Dear Bootham
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 90 காலகட்டம் தான் பெஸ்ட். இதை கண்டிப்பாக சினிமாவை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ இரண்டிலும் 90 காலகட்டம் சிறப்பாக இருந்தது. அப்படி அந்த காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் தான் மை டியர் பூதம்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவில் ஒளிபரப்பான இந்த தொடர் 2007ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 914 எபிசோடுகள் ஒளிபரப்பானது, இப்போது இந்த பெயரை கேட்டாலும் எல்லோருக்கும் சில காட்சிகள் நியாபகம் வந்துவிடும்.
புதிய சீரியல்
இந்த மை டியர் பூதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்போது பாடல்கள், சில படங்கள் என நாயகியாக நடித்து வருபவர் தான் வெண்பா. தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரை பக்கம் வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மனசெல்லாம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.