என் மகனுக்கு தைரியம் இல்லை.. நாகார்ஜூனா இப்படி சொல்லிட்டாரே
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தற்போதும் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ரஜினி உடன் கூலி படத்தில் நடித்து இருந்தார்.
நாகர்ஜூனாவின் இரண்டு மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் என இருவருமே சினிமாவில் ஹீரோக்களாக இருக்கின்றனர். நாக சைதன்யா நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தைரியம் இல்லை
நாகர்ஜூனா ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்த சிவா படம் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது ரீரிலீஸ் ஆகிறது.
அதற்கான நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜூனாவிடம், அந்த படத்தின் ரீமேக்கில் உங்கள் மகன்கள் நடிப்பார்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
"என் மகன்களுக்கு இந்த படத்தினை ரீமேக் செய்ய தைரியம் இல்லை" என பதில் கூறி இருக்கிறார் நாகர்ஜுனா.
