12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ..

By Karthick Raja Jun 17, 2026 07:28 AM GMT
Report

மைனா நந்தினி

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி. இவர் விஜே-வாக தனது மீடியா பயணத்தை தொடங்கி பின் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் வெள்ளித்திரைக்கு வந்த நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3, விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நந்தியின் கணவர் யோகேஷ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவர்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

உடல் எடை

இந்த நிலையில், நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து உடல் எடை குறைத்துள்ளார். நந்தினி 12 கிலோ மற்றும் யோகேஷ் 20 கிலோ உடல் எடை குறைத்துள்ளனர். யோகேஷ் 92 கிலோவிலிருந்து 72 கிலோவிற்கும், நந்தினி 74 கிலோவிலிருந்து 62 கிலோவிற்கும் எடையை குறைத்துள்ளனர். இந்த நிலையில், உடல் எடையை குறைக்க நந்தினி - யோகி ஜோடி பின்பற்றிய 3 விஷயங்களை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

3 சீக்ரெட் விஷயங்கள்

முதல் விஷயம் ஜிம் செல்வது. முறையாக ஜிம் சென்று, அங்கு இருவரும் எடைப்பயிற்சி செய்துள்ளனர். ஜிம்மை பொறுத்தவரை, எப்போதாவது ஜிம் செல்வேன் என்று நினைக்காமல், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வது என்பதில் இருவருமே உறுதியாக இருந்துள்ளனர். அதிலும் கார்டியோ மட்டும் செய்து உடல் எடையை குறைக்க நினைக்காமல், எடை தூக்கும் பயிற்சிகளையும் செய்து தசை வலிமையையும் பெற்று எடையை குறைத்துள்ளனர்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்

கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்

நந்தினி - யோகேஷ் இருவருமே பின்பற்றிய ஒரு முக்கியமான சீக்ரெட், காலையில் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது. இப்படி செய்யும்போது உடலுக்கு கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது, உடல் சர்க்கரை பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்தும். இது வேகமான எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

இரண்டாவது விஷயம், டயட். முறையாக ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலுடன் தங்களின் உணவுமுறையை இருவரும் அமைத்துள்ளனர். அதே போல் இருவருமே, முடிந்தவரை இரவு உணவை 7 - 8 மணிக்கு முன்பே முடித்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளனர். சாப்பிட்டுவிட்டு 2-3 மணி நேரம் கழித்தே படுக்கைக்கு செல்கின்றனர். இதன்மூலம் உணவு நன்கு ஜீரணமாவதால், மறுநாள் காலையில் எழும்போது உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

மூன்றாவது விஷயம், உறக்கம். உடல் எடை குறைப்பதில் நல்ல தூக்கம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனென்றால் குறைவாக தூங்கும்போது பசியை தூண்டும், 'கிரெலின்' ஹார்மோன் அதிகரித்து, வயிறு நிறைந்ததை உணர்த்தும் 'லெப்டின்' ஹார்மோன் குறைந்துவிடுவதால் நமக்கு அதிக பசி எடுத்து நொறுக்கு தீனிகள் மீதமான ஆசை கூடுகிறது. மேலும், தூக்கமின்மை உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி கொழுப்பை கரைக்கும் வேகத்தை குறைப்பதுடன், அடுத்த நாள் உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றல் இல்லாமல் உடலை சோர்வடைய செய்கிறது.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. | Myna Nandhini 12 Kg Weight Loss Secret

எனவே, பசியை கட்டுப்படுத்தவும், உடலின் சர்க்கரை அளவை சீராக வைக்கவும், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கவும், தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழமான தூக்கம் அவசியமாகும். இதனால் நந்தினி - யோகேஷும் நல்ல தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து வந்துள்ளனர். இப்படி நிபுணர் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றியதும், தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்ததும் தங்களின் இந்த ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு உதவியது என்றுள்ளார் நந்தினி - யோகேஷ் ஜோடி தெரிவித்துள்ளனர்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US