புதிய வீடு கட்டி குடிபோன நடிகை மைனா நந்தினி... வீடியோவுடன் இதோ
மைனா நந்தினி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியிலும் மிகப்பெரிய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.
அதில் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் சரவணன்-மீனாட்சி, இதில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நந்தினியாக இருந்தவர் மைனா நந்தினியாக வலம்வர ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாக இருந்தவர் வெள்ளித்திரையிலும் கலக்க துவங்கினார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதிலும் பிஸியானார்.

சொந்த வீடு
யோகேஷ்வரன் என்பவரை திருமணம் செய்த நந்தினிக்கு ஒரு மகனும் உள்ளார்.

அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுக்கும் போட்டோஸ், வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது, யூடியூபில் போடுவது என இருப்பார். இந்த நிலையில் நடிகை மைனா நந்தினி புதிய வீடு ஒன்றை வாங்கி குடியோயுள்ளார்.
குடும்பத்துடன் கோலாகலமாக தனது புதிய வீட்டிற்கு பூஜை செய்து குடிபோயுள்ளார், அந்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.