மைனா பட புகழ் நடிகை சூசனை நியாபகம் இருக்கா?- இப்போது எங்கே, எப்படி உள்ளார், போட்டோ இதோ
நடிகை சூசன்
சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் ஒரு கதாபாத்திரம் நடித்துவிடுவார்கள்.
அப்படி பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் எப்போது வர்றீங்க என்ற மிரட்டலான வசனம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் நடிகை சூசன்.
DLF நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் விஜய் டிவியின் சுழியம் தொடரின் மூலம் தனது பயணத்தை துவங்கினார்.
அதன்பின் தென்றல், ஆபிஸ் போன்ற தொடர்களில் நடித்தவர் வெள்ளித்திரை பக்கம் வந்து மைனா, நர்த்தகி, பேச்சியக்கா மருமகன், ரட்சகன், ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் ரீச் இல்லை.
போட்டோஸ்
பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தும் சினிமாவை விட்டு விலகிய சூசன் பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளாராம். தற்போது சூசன் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.