நாகினி 7 சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... ஆனால்?
நாகினி 7
தமிழில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, நடிகைகள் நடிக்கும் சீரியலுக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.
ஆனால் அவர்களை தாண்டி மற்ற மொழி சீரியல் நடிகைகள் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறார்கள். அப்படி குறிப்பிட்ட பாலிவுட் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம், அதுஎன்ன தொடர் பாம்பை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த நாகினி சீரியல் தான்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி கடைசியாக 6வது சீசன் முடிவுக்கு வந்தது.

7வது சீசன்
தற்போது நாகினி சீரியலின் 7வது சீசன் குறித்த அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கிறது.
தமிழில் டப் செய்யப்பட்ட நாகினி சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் இந்த 7வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan