ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த நாகின் சீரியல் எப்போது ஆரம்பம் தெரியுமா?... வெளிவந்த புரொமோ
நாகின் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
டிஆர்பியில் டாப்பில் வரும் சீரியல்கள் அதிகம் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தொடர்கள் தான் இடம்பெறுகின்றன. தமிழில் நேரடி தமிழ் சீரியல்களை தாண்டி ரீமேக் தொடர்களும், டப்பிங் சீரியல்களும் அதிகம் களமிறங்குகின்றன.

நாகின்
அப்படி தமிழ் சின்னத்திரையில் விரைவில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டடித்த நாகின் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

பாம்பை மையமாக வைத்து ரசிகர்களை ரசிக்க வைக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட கதைகள் தான் நாகினி, இதில் பல சீசன்கள் வந்துவிட்டது. தற்போது நாகின் 6வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
வரும் மார்ச் 16ம் தேதி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.