நாய் சேகர் Returns-ல் பிக் பாஸ் பிரபலம், இளம் நடிகையுடன் நடிக்கும் வடிவேலு..
நீண்ட கால இடைவேளைக்கு பிறகு வடிவேலு மீண்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் Returns படத்தில் தான் வடிவேலு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் லண்டன், சென்னை என இரண்டு இடங்களிலும் நடக்கவுள்ளதாம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் சீரியல் மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஷிவானி தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதற்கு முன் அந்த கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஷிவானி அதில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
