நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் 8 நாட்கள் வசூல்- எவ்ளோ தெரியுமா?
தமிழ் நாட்டின் முக்கிய நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவருடைய படத்தில் பேசிய அனைத்து காமெடி வசனங்களும் தற்போது வரை மக்கள் மனதில் இருந்து வருகிறது.
வடிவேலு கதாநாயகனாக நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது. இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
மேலும் படத்தில் குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
வசூல்
நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், 8 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ 7.70 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகிவுள்ளது.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான லைகா இதுவரை வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
Also Read: இரண்டே நாட்களில் 2000 கோடியை கடந்து வசூல் செய்த அவதார்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை