கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.. ஜோடியாக வெளியிட்ட பதிவு
விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் முதல் சீசன், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
இதன்பின், முதல் சீசனுக்கு பதில் புத்தம் புதிய பொலிவில் சீசன் 2 ஆரம்பமானது. முதல் சீசனுக்கு கிடைத்த அதே வரவேற்ப்பு இரண்டாம் சீசனுக்கும் கிடைத்து வருகிறது.
முதல் சீசனில் ரக்ஷா மற்றும் ராஷ்மி என இரு கதாநாயகிகள் நடித்து வந்தனர். இதில் நடிகை ராஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு, ராஜபார்வை சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.
நடிகை ராஷ்மி ஜெயராஜ், ரிச்சு என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது தான், கர்ப்பமாக இருப்பதாக நடிகை ராஷ்மி அறிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..