அம்மாவா? இல்லை சித்தியா? மாயன் எடுக்கப்போகும் முடிவு என்ன.. அதிரடியான திருப்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்..
அதிரடியான திருப்பத்தை சந்தித்து, மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2.
இதில், முத்துராசை கொன்றது, காயத்திரி தான் என்று உண்மை தெரியவர, அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற மாயன் முழு சொத்தையும், மாசாணிக்கு எழுதி கொடுத்துவிட்டார்.
ஆனால், மாயன் வெளியேறும் நேரத்தில், சரியாக மாஸ் என்ட்ரி கொடுத்து, மாறன் மாயனை காப்பாற்றிவிட்டார்.
இதன்பின், தனது அம்மா வீட்டை விட்டு வெளியேற நாச்சியார் தான், முக்கியமான காரணம் என்று மாறன் நினைத்துக்கொண்டு, அவரை பழிவாங்க தான், மீண்டும் சொந்த ஊருக்கு வந்துருகிறார்.
இந்நிலையில், தனது அண்ணன் மாயனை வீட்டிற்குள் வர சம்மதித்த மாறன், நாச்சியார் மற்றும் அவரது மகள்கள் மூவரும் வரக்கூடாது என்று கூறிவிட்டார்.
இதனால், தற்போது தனது அம்மா மற்றும் தம்பி பக்கம் மாயன் நிற்க போகிறாரா.. இல்லை தனது சித்தி மற்றும் மூன்று தங்கைகள் பக்கம் மாயன் நிற்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ப்ரோமோ வீடியோ..