நான் ஈ பட நடிகைக்கு என்னாச்சு.. புகைப்படம் பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருப்பவர் நடிகர் ஹம்சா நந்தினி. அவர் தெலுங்கில் இருபதுக்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். நான் ஈ படத்தில் வில்லன் சுதீப் உடன் பார்ட்டியில் இருக்கும் பெண்ணாக அவர் தோன்றி இருப்பார்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவர் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் எந்த பதிவும் போடாமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஹம்சா நந்தினி தலையில் சுத்தமாக முடி இல்லாமல் வெளியிட்டு இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கீமோ தெரபி காரணமாக தான் அவர் இந்த நிலைக்கு சென்று இருக்கிறார்.
"நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மார்பகத்தில் ஒரு சின்ன கட்டி வந்தது. என் வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை என எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. 18 வருடங்களுக்கு முன்பு என் அம்மாவை ஒரு கொடிய நோய்க்கு பறிகொடுத்துவிட்டு இருட்டில் வாழ்த்துக்கொண்டிருந்தேன். நான் அதிகம் பயத்தில் இருந்தேன்."
"சில மணி நேரங்களுக்கு பிறகு நான் க்ளினிக் சென்று கட்டியை செக் செய்து கொண்டேன். அதன் பின் surgical oncologist மூலமாக பயாப்சி செய்ய வேண்டும் என சொன்னார்கள். அப்போது தான் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சை மூலமாக கட்டி அகற்றப்பட்டது. எனக்கு பரவல் இல்லை என மருத்துவர்கள் அப்போது கூறினார்கள்."
"ஆனால் அது குறைந்த காலம் மட்டுமே. அதன் பின் எனக்கு BRCA1 (Hereditary Breast Cancer) இருப்பதை உறுதி செய்தார்கள். அதற்கான சிகிச்சை மிக தீவிரமானது. நான் தற்போது வரை 9 முறை கீமோதெரபி செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது" என ஹம்சா நந்தினி தெரிவித்து உள்ளார்.