நானே வருவேன் திரைவிமர்சனம்

Dhanush Yuvan Shankar Raja Selvaraghavan Naane Varuven
By Tony 5 மாதங்கள் முன்

கதைக்களம் 

தனுஷ் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். பிரபு, கதிர் இதில் கதிர் வழக்கமான பிள்ளைகள் போல் இல்லாமல் சிறு வயதில் இருந்தே வித்தியாசமாக இருக்கிறார்.

இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோவிலில் விட்டு, பிரபுவை மட்டும் வளர்கிறார்கள். வருடங்கள் கழித்து பிரபு அழகான மனைவி, அன்பான மகள் என சந்தோஷமாக வாழ்கிறார்.

நானே வருவேன் திரைவிமர்சனம் | Naane Varuvean Review

அப்போது தனுஷ் மகள் தனியாக பேசுகிறார், சில நாட்களில் அவர் மீது சில மாற்றம் தெரிய, ஒரு கட்டத்தில் தன் மகள் மீது ஒரு ஆவி இருப்பதை கண்டுப்பிடிக்கிறார் தனுஷ்.

அந்த ஆவியிடம் பேச முயற்சிக்கும் போது, அந்த ஆவி ஒரு கோரிக்கை வைக்கிறது, அதை செய்தால் தான் உன் மகளை விட்டு போவேன் என்று சொல்ல, தனுஷும் அதை செய்ய துணிகிறார், அந்த ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா, தன் மகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் இரட்டை வேடம், பிரபுவாக சாந்தமாக தன் மகளுக்கு ஆவி பிடித்து அவர் கஷ்டப்படும் போது இவர் தவிப்பது நமக்கும் பரிதாபம் வருகிறது.

மறுப்பக்கம் கதிர் கொடூர வில்லனாக மிரட்டுகிறார், அது தன்னை வம்பு இழுத்தவனை காலை மகன் முன் அமைதியாக கடந்து சென்று இரவு ஓட விட்டு கொல்வது திகில்.

நானே வருவேன் திரைவிமர்சனம் | Naane Varuvean Review

படத்தில் பெரிய கேரக்டர் என்று எதுவுமில்லை, தனுஷை நம்பியே செல்கிறது, தனுஷ் மகளாக நடித்தவர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் முதல் பாதி ஏதோ கான்ஜுரிங் படம் போல் மிரட்டுகிறது, அதுவும் இடைவேளை காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது.

இரண்டாம் பாதி கதையாக நகர்வதால் கொஞ்சம் திரைக்கதை மெதுவாக தான் செல்கிறது, முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை.

அதே நேரத்துல் வில்லன் தனுஷ் தன் அசுர நடிப்பால் இரண்டாம் பாதியை நகர்த்துகிறார். படத்தின் மிகப்பெரிய பலம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான்.

நானே வருவேன் திரைவிமர்சனம் | Naane Varuvean Review

இடைவேளை காட்சியில் பேய் கண்டுபிடிக்கும் இடத்தில் மொத்த ஆடியன்ஸையும் தன் இசையால் உறைய வைக்கிறார்.

செல்வராகவன் படம் என்றாலே வசனம் பேசப்படும், இதில் வசனங்களே பெரிதாக இல்லை, முழுவதும் விஷ்வல் ஆக கொண்டு வர ஓம் பிரகாஷும் தன் முழு பங்கை ஆற்றியுள்ளார்.

க்ளாப்ஸ்

தனுஷின் நடிப்பு

படத்தின் முதல் பாதி

பின்னணி இசை 

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் விறு விறுப்பாக கொண்டு போயிருக்கலாம்

மொத்தத்தில் அமைதியாக இருக்கும் என நினைத்த தனுஷ் போஷன் ஆர்பாட்டமாகவும், ஆர்பாட்டமாக இருக்கும் என நினைத்த தனுஷ் போஷன் அமைதியாவும் செல்கிறது.

நானே வருவேன் திரைவிமர்சனம் | Naane Varuvean Review


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US