நானே வருவேன் படத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெளியேறிய ஒளிப்பதிவாளர், என்ன காரணம் தெரியுமா?
நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் நானே வருவேன், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானவர் அரவிந்த் கிருஷ்ணா அவர் இப்படத்திலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக யாமினி ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே தற்போது அவரும் இப்படத்தில் விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் "இயக்குநர் செல்வராகவன் மற்றும் ‘நானே வருவேன்’ படக்குழுவுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.
It was a great experience and learning working with director @selvaraghavan and the creative team of #naanevaruven. Due to unavoidable reasons I have decided to step out of the project. Best wishes to the team! Thanks for the support
— Yamini Yagnamurthy (@yaminiyag) December 11, 2021
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan