தனுஷின் நானே வருவேன் திரைப்படம் இதுவரை இவ்வளவு வசூலித்துள்ளதா?
நானே வருவேன்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தனுஷின் தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி இருந்தது. அண்மையில் நானே வருவேன் என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவருக்கும் இது ஒரு சூப்பரான திரைப்படமாக அமைந்ததாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பட வசூல்
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 4 நாள் முடிவில் ரூ. 20 கோடி உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள் News Lankasri
