நானே வருவேன் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா.. தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
நானே வருவேன்
செல்வராகவன் இயக்கத்தில் நான்காவது முறையாக தனுஷ் நடித்து உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன்.
வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்தாக படத்தின் டீசருக்கு மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
இந்நிலையில், வருகிற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மற்ற படங்களில் அப்டேட் கூட அன்று வெளியாகும் என தனுஷின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்களால் காத்திருக்கும் ட்ரீட் என்னவெல்லாம் என்று..