அட நம்ம நாட்டாமை பட புகழ் டீச்சரா இது? - இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நாட்டாமை
நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த வில்லுப்பாட்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் தான் ராணி.
அப்படத்திற்கு பிறகு அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராததால் அப்படியே கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். பின் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி வந்தார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார், இந்த படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் ஜெமினி படத்தில் ஓபோடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஹிட்டானார்.
லேட்டஸ்ட் போட்டோ
ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குறைய ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அட நம்ம நாட்டாமை டீச்சரா இவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.