நடிகை நதியாவா இது, செம மாஸாக அவரே வெளியிட்ட ஒர்க்-அவுட் வீடியோ- இதோ பாருங்க
என்றுமே 16 என மார்க்கண்டேயன் என்பவரை கூறுவோம். தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே இளமை என நடிகை நதியாவை கூறி வருகிறார்கள்.
80களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் இப்போதும் அதே அழகு, துள்ளல் என இருக்கிறார்.
உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் எனது கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறார் என கூறியிருந்தார்.
அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் நதியா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படம், வீடியோ, பிடித்த விஷயம் என எதையாவது போஸ்ட் செய்துகொண்டு இருப்பார்.
அப்படி அவர் ஷேர் செய்து பழைய புகைப்படங்கள் கூட வைரலானது, அடுத்து அவர் ஒரு மாஸான ஒர்க் அவுட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம நதியாவா இது, இந்த வயதிலும் செம மாஸான ஒர்க் அவுட் செய்கிறாரே என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.