புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. அவர் செய்த நெகிழ்ச்சியான செயல்
நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80களில் இருந்தே நடித்து வருபவர். தற்போது நதியாவுக்கு 59 வயதாகிறது. இளம் வயதில் இருந்த அதே லுக்கில் அவர் தற்போதும் இருக்கிறார் என தொடர்ந்து அவரை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்படுவதுண்டு.
நதியாவுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர்கள் சினிமாவில் நடிக்க வரவில்லை.

ஹாலிவுட் நடிகையுடன் சந்திப்பு
இந்நிலையில் நடிகை நதியா ஆஸ்திரேலியா சென்ற போது அங்கு ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் என்பவரை சந்தித்து இருக்கிறார். தான் அவரது Fan girl என நதியா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் முன்னாள் மனைவி தன் நிக்கோல் கிட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவர் தான் Nicole Kidman. நதியா அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது அவருக்காக குனிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
என்னை விட அவர் 6 இன்ச் உயரமாக இருக்கிறார் என நதியா அந்த வீடியோவை வெளியிட்டு பதிவிட்டு இருக்கிறார்.