தளபதி விஜய்யுடன் நடிப்பது குறித்து நடிகர் கங்கனா ரனாத் சொன்ன விஷயம்...
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் கங்கனா ரனாத், இவரின் திரைப்படங்கள் அங்கு பெரிய வரவேற்பை பெறும்.
மேலும் தற்போது கங்கனா ரனாத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நாளை இப்படம் இந்தியளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது, ஏற்கனவே தலைவி திரைப்படத்தின் Preview ஷோ மிக சிறந்த விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாத் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தமிழ் திரையுலகில் எந்த உச்ச நட்சத்திரங்களுடன் நீங்கள் பணிபுரிய ஆசை என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் "விஜய் சார் அவர் இங்கு அல்டிமேட் ஹீரோவாக இருக்கிறார், மேலும் ரஜினி சார் உடனும் பணிபுரிய ஆசை" என கூறியுள்ளார்.