நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு பலி கொடுக்கப்பட்ட எருமை மாடுகள் ! கொடூரமான செயலால் சர்ச்சை
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் சுதீப் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிப்பை தவிர இவர் அறக்கட்டளைகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதனால் அவர் தனது ரசிகர்களின் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் நடிகர் சுதீப் அவரின் 50 வது பிறந்தநாளை கொண்டாடினார், இதற்காக பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி கட்அவுட் வைத்து பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது ரசிகர்கள் சிலர் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு, அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து, சுதீப் வாழ்க என கோஷமிட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வால் பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.