நடிகர் சங்க தேர்தல் முடிவு வெளியானது! பாண்டவர் அணி வெற்றி.. வாக்குகள் விவரம்
2019ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் என்னும் பணி இன்று நடந்து வந்த நிலையில் முடிவுகள் வெளியாக தொடங்கி இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை
விஷாலின் பாண்டவர் அணி மற்றும் ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணி ஆகியவை மோதிக்கொண்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாண்டவர் அணி தான் முன்னணியில் இருந்தது.
விஷால், கார்த்தி வெற்றி
பாண்டவர் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக் வெற்றி பெற்றிருப்பதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது. அவர் மொத்தம் 1827 வாக்குகள் பெற்று இருக்கிறார். தபால் வாக்குகள் 818 மற்றும் நேரடி ஓட்டுகள் 1009 அவருக்கு கிடைத்து இருக்கிறது.
பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷை தோற்கடித்து இருக்கிறார். இதன் மூலமாக அவர் இரண்டாம் முறையாக பொது செயலாளர் ஆகிறார். விஷால் 1720 வாக்குகளும், ஐசரி கணேஷ் 1032 வாக்குகளும் பெற்றனர்.
நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பாக்யராஜை விட647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் துணை தலைவர் பதவிக்கு வெற்றி பெற்று இருக்கின்றனர்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
