நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை! முன்னிலையில் இந்த அணி தான்! ஐசரி கணேஷ் திடிரென வெளிநடப்பு
2019ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் கோர்ட் உத்தரவு காரணமாக எண்ணப்படாமல் இருந்தது. தற்போது நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கும் நிலையில் வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
நடிகர் சங்கம்
நடிகர் சங்கம் தேர்தல் சமீப காலத்தில் மிகவும் பரபரப்பாக நடக்கும் ஒன்றாகிவிட்டது. இரண்டு அணிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி மீடியா பேட்டிகளில் மிக மோசமாக விமர்சித்து பேசுவது பரபரப்புக்கு காரணமாகி விட்டது.
2019ல் நடந்த தேர்தலில் விஷால் - நாசர் ஆகியோரின் பாண்டவர் அணி மற்றும் ஐசரி கணேஷ் தலைமையிலான மற்றொரு அணி மோதிக்கொண்டனர்.
முன்னிலை விவரம்
இன்று அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் நாசர் - விஷாலின் பாண்டவர் அணி தான் முன்னிலையில் இருக்கிறது. மேலும் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் அணியினர் பாதியில் வெளிநடப்பு செய்தனர். அதனால் வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
முழு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது.