அவ்வாறு நடக்கவில்லை என்றால்.. மனைவி குறித்து ஓப்பனாக பேசிய நாக சைதன்யா
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதலில் இருந்து, பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, நாக சைதன்யா தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள இப்படம் வரும் 7 - ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக தனது மனைவி சோபிதா சொந்த ஊரான விசாகப்பட்டினம் சென்றிருந்த நாக சைதன்யா அங்கு அவர் மனைவி குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாக சைதன்யா ஓபன்
அதில், " எனது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும், விசாகப்பட்டினத்தில் ஓடியதா? என்று தான் முதலில் பார்ப்பேன். ஏன்னென்றால் இங்கே படம் நல்ல பெயரை பெற்றால் உலகம் முழுவதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று விடும் என்பது என் நம்பிக்கை.
அதனால் இந்த முறையும் விசாகப்பட்டினம் மக்கள் எனக்கு கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லை என்றால் என் வீட்டம்மா என்னை கலாய்த்துவிடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
