முதன்முறையாக விவாகரத்துக்கு பிறகு சமந்தா பற்றி பேசிய நாக சைத்தன்யா
கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு பிரபலத்தின் சொந்த வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தது. நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.
விவாகரத்து குறித்து சமந்தா நிறைய பேசிவிட்ட நிலையில் நாக சைத்தன்யா பிரிவு பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர், பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு என பேசியுள்ளார்.
‘அவர்கள் சந்தோஷத்திற்காக பிரிந்துவிட்டோம் என்று கூறினாலும் ரசிகர்களுக்கு இந்த சூப்பர் ஜோடி பிரிந்தது வருத்தம் தான்.