ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கிறாரா ஜோதிகா? மறுத்த தெலுங்கு ஹீரோ
ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆவதும், தெலுங்கு/தமிழ் படங்கள் அங்கு ரீமேக் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் சமீப காலமாக ரீமேக் படங்கள் தோல்வியை தான் அதிகம் தழுவி வருகின்றன.
சமீபத்தில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Bhool Bhulaiyaa 2 ரீமேக்?
இந்நிலையில் தற்போது ஹிந்தியில் ஹிட் ஆன Bhool Bhulaiyaa 2 படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி வருகிறது. அதில் ஜோதிகா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது நாக சைதன்யா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இதை மறுத்து இருக்கிறார். பொய் செய்தி பரப்பாதீர்கள் என அவர் மீடியாவை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வெளிநாடு ட்ரிப் சென்ற சமந்தா.. காரில் என்ன செய்திருக்கிறார் பாருங்க